நோயாளிகளின் உரிமைகள் மீறப்படுகிறதா – மனநல காப்பகங்கள் குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு!
Monday, July 31st, 2023
தேசிய மனநல காப்பகத்தில் தங்கிச் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் உரிமைகள் மீறப்படுகிறதா என்பது குறித்து விசேட விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மருத்துவ உதவியாளர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளது.
அங்கொட மனநல நிறுவனத்தில் நோயாளி ஒருவரை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நான்கு வைத்தியசாலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன் முதற்கட்ட தகவல்களில் இவ்வாறான விசாரணையின் அவசியத்தை உணர்ந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மோதலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரத்து?
மாகாண சபை தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் இறுதித்தீர்மானம் - எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித்தல...
தோழர் வலன்ரயனின் உடல் நலன் குறித்து செயலாளர் நாயகம் நேரில் சென்று அவதானிப்பு!
|
|
|


