யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் நடவடிக்கை!

Saturday, October 29th, 2022

யாழ்ப்பாணம் புனித ஜோன். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது.

பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

அது தொடர்பில் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் அவற்றை அகற்றும் போது, அதனுள் மோட்டார் சைக்கிள் காப்புறுதி அட்டை ஒன்று மீட்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கழிவுகளை அவரே வீசி இருக்கலாம் என சந்தேகிப்பதனால் அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்! 
சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு – மத்திய வங்கியின் ஆளுநரி...
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல - இரு நாடுகளும் நெருங்கிய கூட்டாளிகள் - சீன வெளியுறவு அமை...