நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதமளவில் குறைவடையும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நம்பிக்கை!
Tuesday, December 13th, 2022
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் நேற்று முன்தினம் (11) கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
சீனாவினால் இலங்கைக்கு வழங்கக்கடும் சுகாதார ஒத்துழைப்புகளின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைத்துள்ளன.
இதனிடையே, 42 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பல்கலை மாணவர்கள் பயங்கரவாதிகளைப் போன்று நடந்தனராம் - மஹிந்த அமரவீர!
மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை - மின்வலு அமைச்சு!
வடக்கு கடலில் பேருந்துகளை இறக்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுங்கள் – அரசாங்கத்திடம் யாழ் மாவட்ட ...
|
|
|


