நாட்டில் அடிப்படைவாதங்களுக்கு இடமில்லை: அடியோடு ஒழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் தெரிவிப்பு!

Thursday, April 22nd, 2021

நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்குவதற்கு ஒருநாளும் இடமளிக்கப்படாது என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் ஏனைய பாதுகாப்பு தரப்பினரும் மிகவும் அவதானத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே அடிப்படைவாதிகள் தலைதூக்குவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடிப்படைவாதத்தை போதிக்கும் புத்தகங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவை அடையாளம் காணப்பட்டு சுங்கத் திணைக்களத்தினர் அவற்றை கைபற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை புத்தகங்களிலும் பிழையான விடயங்கள் சில கற்பிக்கப்படுவதாகவும் அவையும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிலை வழிபாடுகளில் ஈடுபடுவோரை கொலை செய்தல், வேற்று மதங்களை வழிபாடு செய்வோரை துன்புறுத்தல் போன்ற விடயங்கள் பாடசாலை புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிழையான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டு அவ்வாறான விடயங்கள் நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:


கடந்தகாலத்தில் எட்டப்பட்ட தீர்க்கமான முடிவுகள் போல் தற்போதைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் முடிவ...
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிப்பிக்...
எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத...