ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, November 22nd, 2016

ஜப்பானின் ஃபுகுஷிமா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 என பதிவாகியுள்ளதாகவும் இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இவாக்கி நகரில் 10 கி.மி ஆழத்தில் இந்த நிலண்டுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் 9.1 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் இதுதான் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஃபுகுஷிமா கடற்பகுதியில் சுனாமி தாக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் சுனாமி அலைகள் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் சேதங்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மட்டுமின்றி தற்போதுள்ள எச்சரிக்கை நடவடிக்கை குறித்து பதில் அறிவுப்புகள் வெளியிடும்வரை பொதுமக்கள் பாதுகாப்பான பகுதியில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

 cc242c4454cbeb1991ae5ac770f5fbee_XL

Related posts: