நாட்டின் பல பாகங்களில் இன்று பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!
Tuesday, November 8th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இன்று (8) இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவுறுத்தியுள்ளது..
குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழைபெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேங்காய்க்கு வெளிநாடுகளில் கிராக்கி!
இந்தியவின் 72வது சுதந்திரதினவிழா யாழ்ப்பாணத்தில்!
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு!
|
|
|


