நாட்டின் தேசிய பாதுகாப்பை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்த நடவடிக்கை – கைத்தொழில் துறை அமைச்சர் வீரவன்ச!

Monday, January 25th, 2021

தேசிய பாதுகாப்பை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் துறை அமைச்சர் வீரவன்ச தெரிவித்தார்.

அதேபோல், போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகள் என்பன கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அனைவரும் அச்சம், சந்தேகம் இன்றி வாழக்கூடிய சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீரவன்ச கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைசர் நல்லாட்சியின் தோல்வியில் இருந்து நாட்டை விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சஹ்ரான் போன்றவர்கள் சமூகத்தின் மீது ஏற்படுத்திய சவால்களும் தோற்கடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பொருளாதார சவால்களும் வெற்றிக் கொள்ளப்படும். கடந்த ஆட்சிக்கால்தில் எவ்.சி.ஐ.டி போன்ற சட்டவிரோத பொலிஸ் பிரிவுகளை நிறுவி அரச ஊழியர்களையும் அரசியல்வாதிகளையும் பயமுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் வெறுப்படைந்த அரச ஊழியர்கள் வேலை செய்யாததனால் அந்தப் பணிகள் மந்த கதியில் இடம்பெற்றன.

இவ்வாறான அணுகுமுறை தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை கடந்த நல்லாட்சிக் காலத்தில் இடைநடுவில் கைவிடப்பட்ட செயற்றிட்டங்களின் பணிகளை ஆரம்பித்து புதிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அரசாங்கம் கடன் பெற்ற போதிலும் அதன்மூலம் மேற்கொண்ட செயற்றிட்டமும் இல்லையென அமைச்சர் வீரவன்ச மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: