காற்றலை கம்பங்கள் அமைப்பதற்கு மக்கள் எதிர்க்கவில்லை: வாளிடங்கழில் அமைப்பதையே எதிர்க்கின்றனர்!

Sunday, December 15th, 2019

https://m.facebook.com/story.php?story_fbid=1269337243245870&id=412344058945197

மக்கள் செறிந்து வாழும் இடங்களுக்குள் காற்றலை மின் உற்பத்து கம்பங்களை அமைப்பது மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கும் எனத் தெரிவித்து அந்த காற்றலை மின் உற்பத்தி கம்பங்களை மறவன்புலவு பகுதியில் அமைக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து அவர்களை வாளால் வெட்டிய ஒப்பந்த்தார்ருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடிய சில பொதுமக்களை பொலிசார் கைது செய்த சம்பவமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் காற்றலை மின்னுற்பத்தி நிறுவனத்திடம் கையூட்டு வாங்கியே அரங்கேற்ற்ப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மக்களின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் இருந்து பாரிய வாகனங்களில் கொண்டுவரப்பட்டு மறவன்புலவு பகுதியில் இறக்கப்பட்ட கம்பங்களால் அதிருப்தி அடைந்த மறவன்புலவு மக்கள் ஒன்றுகூடி காற்றலை கம்பங்கள் நிறுவுவதை தடுப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் ஜனநாயக வழி போராட்டத்தை குளப்பும் வகையில் குறித்த கம்பங்களை நிறுவும் ஒப்பந்ததாரர்கள் அச்சுறுத்தல் விடுத்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வாளால் வெட்டியும் உயிரச்சுறுத்தல் விடுத்தனர். குறுத்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு நேற்றுமுந்தினம் பரவலாக ஊடகங்களில் வெளியாகியுருந்தது.

இந்நிலையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தபோதும் வாளால் வெட்டிய நபரை கைது செய்யாது இருதரப்புனரையும் விசாரணைக்கு பொலிஸ் நிலையம் வருமாறு கூறியிருந்தனர்.

பொலிஸாரின் அழைப்பின் பெயரில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும் குறித்த வட்டார உறுப்பினருமான நிமலறோகன் உள்ளிட்ட சிலர் சென்றிருந்த நிலையில் திட்டமிட்ட வகையில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறித்த பகுதி உறுப்பினரது ஆதிக்கம் இருந்ததாக பாதிக்கப்பட்ட மக்களால் கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது யாழ்ப்பணத்திற்கு குடிநீர் கொண்டுவருவதையே பாதிப்பென தடுத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சில தினங்களுக்கு முன்னர் மறவன்புலவு பகுதிக்கு சென்று காற்றாடிக்கான கம்பங்களை அமைப்பது தொடர்பில் சாதகமான கருத்தும் வெளியிட்டுருந்தார்.

இவ்வாறான பின்னணியில் குறித்த காற்றாடிக்கான கம்பங்களை அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத வகையில் இருந்து வந்துள்ளது புலனாகுகின்றது என பலதரப்பினராளும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதன் பின்னணியிலேயே போராடிய மக்கள் மீது வாள் வெட்டும் பாதிக்கப்பட்ட மக்களது கைதும் அமைந்துள்ளது குறிப்பிடத்த்கக்கது.

Related posts: