உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Friday, August 4th, 2017

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக    உள்ளூராட்சி மற்றும் மாகாண சகைள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பைசர் முஸ்தபா  இதனை தெரிவித்ததுடன்  சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்றும் கூறினார்.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதன் மூலம் அரச சொத்துக்கள் விரயமாகவதையும் அரச அதிகாரம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க முடியும். எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களை ஒரே தேர்தலை முறையில் நடத்துவது பற்றி அரசியல் அமைப்புப் பேரவையில் கலந்துரையாடப்படுகின்றது. அமுலில் உள்ள தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை கலப்பு முறையில் நடத்த எதிர்பார்ப்பதாகவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சகைள் அமைச்சர் பைசர் முஸ்தபா  மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: