தேவைக்கு மேலதிகமாக 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, September 27th, 2023

நாட்டில் 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி, தேவைக்கு மேலதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோகத்தில் மொத்த நெல் அறுவடை சுமார் 52 இலட்சம் மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது.

அதனூடாக, 31 இலட்சம் மெட்ரிக் டன் அளவு அரிசியை உற்பத்தி செய்யமுடியும் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை நாட்டின் வருடாந்த அரிசித் தேவை சுமார் 24 இலட்சம் மெட்ரி தொன்களாகும். எனவே, 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைக்கு மேலதிகமாக உள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அடுத்த பெரும்போக அறுவடை வரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சேதனப் பசளையை பயன்படுத்தி பெரும்போக பயிர்ச்செய்கை இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்த திணைக்களம் அறிவிப்ப...
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்த இணக்கம் - இந்தி...
ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் - யாழ்ப்பாணத்தில் ஆறு பேர் பொலிசாரால் கைது யாழ்ப்பாணத்தில் நேற்றி...