சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடியுங்கள் – மட்டு மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்து!

Friday, July 2nd, 2021

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் நா.மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, மட்டக்களப்பில் நேற்று புதிதாக 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மட்டக்களப்பு- ஏறாவூர் பகுதியில் 32பேரும்  காத்தான்குடியில் 30பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அதேபோன்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 8பேரும் வாழைச்சேனையில் ஒருவரும், ஓட்டமாவடியில் 4பேரும்  செங்கலடியில் 8பேரும் வவுணதீவில் 6பேரும் கோறளைப்பற்று மத்தியில் 14பேரும், கிரானில் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2பேரும் வேறு மாகாணத்திலிருந்து வந்தவர்கள் 2பேருக்கும் இவ்வாறு கொரேனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காணப்படுகின்றமையினால் மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: