கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

Sunday, November 26th, 2017

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது முல்லைத்தீவு மாவட்டத்தில் (NVQ) மட்டத்திலான முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை நடத்தி வருகின்றது. பின்வரும் கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதோடு இவற்றுக்கான பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன என உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்

இக் கற்கை நெறிகளாவன,

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியலாளர், இரு சக்கர மற்றும் முச்சக்கர வண்டிதிருத்துநர், வீட்டுமின்னிணைப்பாளர், தையல், வெதுப்புநர், அழகுக்கலையும் சிகை அலங்காரமும், அலுமினியம் பொருத்துநர், கணனி வன்பொருள் திருத்துநர், நீர்க் குழாய் பொருத்துநர், மோட்டார் வாகனம் திருத்துநர் ஆகும்.

இக் கற்கைநெறிகள் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், பாலிநகர், புதுக்குடியிருப்பு அகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வருகின்றன.

இக் கற்கைநெறிகள் அனைத்தும் தேசிய தொழிற்தகைமை (NVQ) சான்றிதழுக்கான பயிற்சிகளாகும். இக்கற்கை நெறிகளை கற்கவிரும்புபவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம், நீதிமன்றவீதி, மாங்குளம் பிரதான வீதி, முல்லைத்தீவு அல்லது பாலிநகர் தொழிற்பயிற்சி நிலையம், மாந்தை கிழக்கு, முல்லைத்தீவு அல்லது ஒட்டுசுட்டான் தொழிற்பயிற்சி நிலையம், 14 ஆம் கட்டை, மாங்குளம் வீதி, முல்லைத்தீவு என்னும் முகவரிகளில் 2017.12.31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளமுடியும். (பயிற்சிநெறிகள் யாவும் இலவசம்)

மேலதிக தொடர்புகளுக்கு:- முல்லைத்தீவு – 0777359505, 0710318989, ஒட்டுசுட்டான் – 0710318991, பாலிநகர் – 0710318990 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.

Related posts: