தனிமைப்படுத்தல் மையங்களுக்காக ஆயர்வேத மருத்துவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தயார் – சுகாதார சேவைசகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க!

Saturday, May 2nd, 2020

தனிமைப்படுத்தல் மையங்களுக்காக ஆயர்வேத மருத்துவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தயார் என சுகாதார சேவைசகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் மையங்களை தங்களுக்கு பொறுப்பளிக்குமாறு ஆயர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் அண்மையில் விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தனிமைப்படுத்தல் பணிகளுக்கு ஆயர்வேத திணைக்களத்திற்கு அதிகாரளித்து, ஆயர்வேத மருத்துவர்களை உடனடியாக அதில் ஈடுபடுத்த உடனடியாக சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என அந்த சங்கம் குறிப்பிட்டிருந்ததது.

எவ்வாறிருப்பினும், தனிமைப்படுத்தல் பணிகளுக்கு ஆயர்வேதம் மூலமாக பெற்றுக்கொள்ளக்கூடியவற்றை பெற்றுக்கொள்ள தாங்கள் தயார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 25 பேரில் 15 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

5 பேர் கடற்படை சிப்பாய்களின் குடும்ப உறுப்பினர் என்பதுடன், ஒருவர் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்தவராவார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், நேற்றைய தினம் ஆயிரத்து 107 பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களுள், 162 பேர் பூரணமாக குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில், 521 பேர் தொடர்நதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts: