யாழில் பலாப்பழம், மாம்பழ வகைகளின் சீசன் ஆரம்பம்!

Sunday, June 4th, 2017

யாழ். மாவட்டத்தில் பலாப்பழம் மற்றும் மாம்பழ வகைகளின் சீசன் ஆரம்பமாகியுள்ளது.

ஏழாலை, குப்பிளான், புன்னாலைக்கட்டுவன் , ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில், கொக்குவில், மீசாலை, கொடிகாமம், சாவகச்சேரி உள்ளிட்ட யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பலாப்பழங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன.

இந் நிலையில் திருநெல்வேலி, சுன்னாகம், மருதனார்மடம், சங்கானை, சாவகச்சேரி உள்ளிட்ட பொதுச் சந்தைகளிலும், சிறு வர்த்தக நிலையங்களிலும் பலாப்பழ வியாபாரம் சூடு பிடித்துள்ளன.

குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் கடந்த சில தினங்களாகப் பலாப்பழங்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது.இந்நிலையில் பலாப்பழங்களின் அளவிற்கேற்ப 150 ரூபா முதல் 500 ரூபா ரூபா வரை பல்வேறு விலைகளிலும் பாலாப்பழங்கள் விற்பனையாவதை அவதானிக்க முடிகிறது.

குடாநாட்டின் தனித்துவமான கறுத்தக் கொழும்பான் உள்ளிட்ட மாம்பழ வகைகளின் சீசனும் ஆரம்பமாகியுள்ளமையால் சந்தைகளிலும், சிறு வர்த்தக நிலையங்கள் மற்றும் நடைபாதை வியாபார நிலையங்களிலும் மாம்பழ வியாபாரமும் அமோகமாக இடம்பெற்று வருகின்றன.

Related posts:


உலகில் பெண்கள் தலைமைத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன: சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சின்...
அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரச அதிகாரிகள் உரியவாறு புரிந்துக்கொள்...
பலம் வாய்ந்த ராஜ்ஜியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் தலையிடும் வாய்ப்பு எமக்கில்லை – ஜனாதிபதி ரணில்...