நாட்டின் தற்போதைய கல்வி முறையில் மாற்றத்’தை கொண்டுவரும் தீவிர முயற்சியில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் – பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித்துடன் விசேட சந்திப்பு!

நாட்டில் தற்போதுள்ள கல்விக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புகள் தொடர்பில், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கும் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித்துக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் வழிகாட்டலின் கீழ், எதிர்காலத்தில் கல்விக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள மறுசீரமைப்புகளுக்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட அனைத்து கிறிஸ்தவ மக்களினதும் முழுமையான ஆதரவை பெற்றுத் தருவதாக இந்தச் சந்திப்பில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் உறுதியளித்துள்ளார்.
மதசார் நிறுவனங்கள் மற்றும் கல்விக் கட்டமைப்புக்கிடையில் தொடர்புகள் காணப்படுவது அத்தியவசியமாகுமென்றும் கல்வி அமைச்சரிடம் இச்சந்திப்பில் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச பதவிகளில் 8000 பட்டதாரிகள்!
பதிவுசெய்வதற்காக 85 அரசியல் கட்சிகள் தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பம்!
எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செலவினத்துக்காக குறைநிரப்பு பிரேரணை பிரதமரினால் சமர்ப்பிப்பு!
|
|