அனல் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரிக்கு தட்டுப்பாடு கிடையாது – வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Friday, March 11th, 2022

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி உரியவாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதென வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் ஊடாக தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கின்றது.

இந்தநிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் வரையில் அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி, மேலும் 5 கப்பல்களின் மூலம் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நாட்டில் இன்றையதினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பை அமுலாக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் L வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள்,  இரண்டரை மணிநேரம் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அதேநேரம், P முதல் W வரையான வலயங்களில், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேரமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.

Related posts: