வாகன சாரதிகளுக்கு சலுகை!

Saturday, October 7th, 2017

வாகன ஓட்டுநர்களுக்கு எதிரான அபராத தொகையை இனிமேல் வித்தியாசமான முறையில் செலுத்துவதற்கு மாற்று நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன்.

இதன்படி அபராதம் செலுத்துவதற்கு இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த நடைமுறையினை மாற்றுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையிலும், அபராத தொகையை செலுத்திவிட்டு அதன் பின்னரே ஓட்டுநர் அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்துவந்துள்ளது.ஆனால் இந்த முறை மிகவும் அசௌகரியம் என்பதனால் அதனை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதாவது, இதுவரையில் போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத பத்திரத்தை, தபால நிலையத்தில் ஒப்படைத்து பணத்தை செலுத்த வேண்டும். அதன் பின்னர் தபால் நிலையத்தில் வழங்கப்படும் பத்திரத்தை மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த முறைமையானது ஓட்டு நர்களுக்கு அசௌகரியங்களை ஏற்ப்டுத்துகின்றதென்று கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை அடுத்தே புதிய முறையொன்று அமுல்ப்படுத்தப்படவிருக்கின்றது. இனிவரும் காலங்களில் இந்த அபராதத் தொகையினை இணையதளம் வாயிலாகச் செலுத்தமுடியும் என்பதோடு குறித்த அதே சந்தர்ப்பத்திலேயே பணத்தை செலுத்தி ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தைப் பெறமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: