கூட்டுறவு திணைக்களத்தின் அக்கறையின்மையால் முற்றாக முடங்கியது கடற்றொழிலாளர் சமாசம் – ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்கள் குற்றச்சாட்டு!

Wednesday, January 18th, 2017

ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் கடந்த பல மாதக்கணக்கில் செயற்படாத நிலையில் முடங்கிக் கிடப்பதால் மீனவர்கள் எவ்விதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக ஊர்காவற்றுறை பிரதேச மீனவர் சங்கங்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பகுதியிலுள்ள 7 கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் கூட்டாக விளங்கும் இச் சமாசம் இவ்வாறு செயற்பாடுகள் இன்றி முடங்கிக் கிடப்பதால் சமாசத்தில் உள்ள பல லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்து பல லட்சம் ரூபா நட்டமடையும் அபாயம் காணப்படுகின்றது செயற்பாடுகள் இன்றி காணப்படும் இச் சமாசத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க உரிய நிர்வாகம் எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்பதோடு கூட்டுறவுத்திணைக்களம் இச் சமாச செயற்பாடுகள் குறித்து அக்கையின்றி இருப்பதாக கடற்றொழிலாளர் சங்கங்களின் நிர்வாகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

பல லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களோடு கடந்த காலத்தில் இயங்கி வந்த குறித்த நமாசம் இப்போது வினைத்திறனற்று முற்றாக செயழிலக்க சம்பந்தப்பட்ட நிர்வாகமும் கூட்டுறவு திணைக்களத்தின் மேற்பார்வை. பரிசோதனை என்பன இன்மையும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சமாசத்தின் முக்கியத்துவம் உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமாசத்துக்கான சிறந்த நிர்வாக சபையை உருவாக்கி மீள் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சமாசத்தின் சொத்துக்களை இருப்பெடுப்புச் செய்து இதுவரை மேற்கொள்ள முடியாத நிதியாண்டுக்கணக்காய்வுகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

black-flag

Related posts: