இலங்கைக்கான ரின்மீன் இறக்குமதியில் வீழ்ச்சி!
Saturday, January 14th, 2017
இலங்கைக்கான ரின் மீன் இறக்குமதி 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் 16.2 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015ல் 49 ஆயிரத்து 16 மெற்றிக்தொன் ரின் மீன் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
தாய்லாந்து, சிலி, தாய்வான், ஜப்பான், சீஷெல்ஸ், யெமன், மாலைதீவு போன்ற நாடுகளிலிருந்தும் சீனாவிலிருந்து கூடுதலான ரின்மீன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
ரின்மீன் இறக்குமதிக்காக கடந்த ஆண்டில் அரசாங்கம் 788 கோடி ரூபாவை செலவிட்டிருந்தது. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 8.5 சதவீத வீழ்ச்சியாகும்.

Related posts:
போதையில் மோட்டார்சைக்கிள் ஓடியவருக்கு இரண்டு மாத சிறை!
வீதி விபத்துக்களால் கடந்த நான்கு மாதங்களில் 709 பேர் உயிரிழப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்த...
குறைக்கப்பட்டது சமையல் எரிவாயுக்களின் விலை – எரிவாயு நிறுவனங்கள் அறிவிப்பு!
|
|
|


