வீதி விபத்துக்களால் கடந்த நான்கு மாதங்களில் 709 பேர் உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Tuesday, June 13th, 2023

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவாக பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக 667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் மொத்தமாக 709 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,160 பாரிய விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 3,201 சிறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு விபத்துகளில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்துடன், 102 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளதாகவும். வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை எனவும் தெரியவந்துள்ளது.

எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: