படகில் தினமும் சென்று பரீட்சை எழுதும் அவலம் – எழுவைதீவில் பரீட்சை மண்டபம் அமைத்துத் தருமாறு கோரிக்கை!

Thursday, November 24th, 2016

யாழ்ப்பாணம், எழுவைத்தீவு மாணவர்களுக்கு அதிகாரிகளால் வழங்கப்பட்ட உத்தரவாதம் இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எழுவைதீவில் உள்ள க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு எழுவைதீவிலேயே பரீட்சை மண்டபம் அமைக்க வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுகிகின்றோம்;. ஒவ்வொரு முறையும் அடுத்த ஆண்டு பரீட்சை நிலையம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிப்பார்கள். ஆனால் நடைபெறவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே இதுகுறித்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். முயற்சி எடுக்கிறோம் என்று அவர்கள் பதிலளித்தனர். இந்த ஆண்டும் பரீட்சை மண்டபம் எழுவைதீவில் இல்லை. கொட்டும் மழையில் படகில் தினமும் பயணித்து பரீட்சை எழுத வேண்டிய துர்பாக்கிய நிலையே எமது பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ளது. என்று அவர்கள் வேதனையடன் தெரிவித்துள்ளனர். எழுவை தீவில் பரீட்சை மண்டபம் அமைக்க கோரியிருந்தோம். 13 மாணவர்கள் மட்டும் உள்ள தீவுக்கு தனியாக பரீட்சை மண்டபம் அமைக்க அனுமதியில்லை என்று பரீட்சைத் திணைக்களம் மறுத்து விட்டது – என்று தீவக வலய கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

exam1

Related posts: