சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவ நிறுவ வர்த்தக அமைச்சு தீர்மானம்!

Saturday, December 18th, 2021

ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் மையப்படுத்தி லங்கா சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவ வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

சந்தையில் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்ற இறக்கத்தை தடுக்க புதிய வலையமைப்பை அமைக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

உள்ளூர் தயாரிப்புகளுக்கான சந்தையை விரிவுபடுத்துவதும், தரமான இறக்குமதி மற்றும் உள்ளூர் பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பை 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கும் வகையில் 1000 ஆக விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த சதொச நிறுவனங்களில் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்வதில் மக்கள் பல அசௌகரியங்களை எதிரகொள்வதாகவும் செய்திகளில் கூறப்படுவது போன்று குறித்த வர்த்தக நிறுவனங்களில் நுகர்வு பொருட்கள் தமக்கு கிடைப்பதில்லை என்றும் நுகர்வோர் குற்றம் சாட்டுவதுடன் இருக்கின்ற பொருட்களை கொள்வனவு செய்தாலும் அவற்றை கொண்டு செல்வதற்கான பைகள் கூட குறித்த நிறுவனத்தால் வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: