20 ஆவது சட்டமூலம்: 6 ஆம் திகதி விசாரணை!

Wednesday, August 30th, 2017

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. இதேவேளை, 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் மனுக்களை சமர்ப்பிப்பதை நாளையுடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியினர் ஆகியோர் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அத்துடன், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்பரல் அமைப்பும் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: