மணல் தொடர்பில் ஒரே நாளில் சுமார் 200 முறைப்பாடுகள் – சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள தகவல்!

Monday, June 8th, 2020

மணல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் பணியகத்தின் தலைவர் அனுர வால்போலா தெரிவித்ததாவது –

மணல் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பில் முறைப்பாட்டை வழங்குமாறு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஊடகங்கள் மூலம் கோரப்பட்டது. அதனடிப்படையிலேயே நேற்று மாலை வரை சுமார் 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணையின் பின்னர் வாகன உரிமையாளர்களின் மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்து அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மணலை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் தொடர்பில் 071 53 52 304 என்ற தொலைபேசி எண்ணுக்கு அறிவிப்பதன் ஊடாக எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: