இழுவைப்படகுகளால் மீனவர்களுக்குப் பாதிப்பு

Friday, November 3rd, 2017

வடமராட்சிக் கடற்பரப்பில் ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் இழுவைப் படகுகளால் சிறு தொழில் மீனவர்கள் பாதிப்படைகின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறு தொழில் மீனவர் ஒருவர் தமது சங்கத்தினூடாக யாழ்.நீரியல்வளத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். வடமராட்சிக் கடற்பகுதியில் ஏராளமான இழுவைப்படகுகள் அன்றாடம் தொழிலில் ஈடுபடுகின்றன. இவ்வாறான ஒரு சில படகுகளால் சிறு மீன்பிடித் தொழில்களில் ஈடுபடும் தம்மால் தொழில் செய்யமுடியவில்லை என மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்த வகைப்படகுகள் கடலில் உள்ள தமது வலைகளை அறுத்துச் செல்கின்றன என்றும் 20 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் வரை பெறுமதியான வலைகள் சேதமடைகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தொண்டமானாறு கடற்பகுதியில் சிறு தொழில் செய்யும் மீனவர் ஒருவரின் 50 ஆயிரம் பெறுமதியுடைய வலைகள் நேற்று முன்தினம் இழுவைப்படகால் மிக மோசமாக அறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: