தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் காணப்படுவதில்லை – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவிப்பு!

Friday, October 21st, 2022

தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் தற்போது காணப்படுவதில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பேராசிரியருமான சி.சிறீசற்குணராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தரும் தகைசார் பேராசிரியருமான சி.பத்மநாதனின் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழாவில்( 19)தலைமை உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக மகாபாரதம் , இராமாயணத்தை, தற்போதுள்ள மாணவர் சமூகமானது சினிமா  மூலம் தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் மாத்திரமே பார்வையிடக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக நீண்ட கால வரலாற்றை கொண்ட நமது இந்து மதத்தின் வரலாறுகளை தற்போதுள்ள இளைஞர்கள் அறிவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாக காணப்படுகிறது என்றார்.

திருகோணஸ்வரம், திருக்கேத்தீஸ்வரம் போன்ற ஆலயங்களுக்கு நெருக்கடி வரும்போதே அதனுடைய அருமை தெரிகிறது. நெருக்கடிகள் சில காலத்திற்கு ஏற்படும். காலத்திற்கு காலம் போத்துக்கேயர், ஒல்லாந்தர்கள் வந்தார்கள். தற்போதும் திருகோணஸ்வரம், திருக்கேத்தீஸ்வரம் போன்ற ஆலயங்களுக்கு நெருக்கடி ஏற்படுகின்றது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


“கிராமத்துக்கு ஒரு வீடு” - பயனாளிகள் தெரிவில் மோசடி - பட்டியலைப் பகிரங்கப்படுத்தி மக்கள் கருத்த அறிய...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது - வீதி அபிவிருத்...
முச்சக்கர வண்டி கட்டணங்களை குறைக்க தீர்மானம் – அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாள...