பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு -அமைச்சர் ரவி கருணாநாயக்க!

Monday, April 24th, 2017

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் இவ்வாறு பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஜி 24 நிதி அமைச்சர்களின் சந்திப்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பங்கேற்றுள்ளதுடன், ஜி 24 நிதி அமைச்சர்கள் சபையின் முதலாவது இணைத் தலைவராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் மிடிசுஹிரோ புர்சாவா மற்றும் உலக வங்கியின் உப தலைவர் அன்டி டிக்சன் ஆகியோருடன் அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்துரையாடியதாகவும் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க மத்திய வங்கி ஆளுனர் ஜெனட் யெலனுடனும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்துரையாடியுள்ளார்.

Related posts: