கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, June 24th, 2021
தற்போதைய கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில்,மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய கொவிட் தொற்று அச்சுறுத்தல் இலங்கைக்கு மாத்திரம் விசேடமான ஒன்றல்ல. உலக நாடுகளில் பல இதற்கு தீர்வை காண்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு – இன்றுமுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் ...
ஜே.வி.பியினருடன் சந்திப்பு - முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் தரப்பினரால் பொது வேட்பாளர் விடய...
|
|
|


