நாடு முழுவதும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் ஐம்பது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன!

Monday, September 25th, 2023

நாடு முழுவதும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் ஐம்பது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையில் தனியார் வர்த்தகர்களுக்கு சொந்தமான நூற்றைம்பது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வர்த்தகம் செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த நூற்றி ஐம்பது எரிபொருள் நிலையங்களில் 12 இன்னும் சீன சினோபெக்குடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை

இது பல தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் கூறுகிறது.

சில காரணங்களால் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வர்த்தக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்கும் திறன் நிறுவனத்திற்கு இருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

000

Related posts: