நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே தேர்தல் திகதி குறித்து கவனம் செலுத்தலாம் -தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

Wednesday, May 27th, 2020

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியொன்று இன்னமும் தீர்மானிக்கப்படாதுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தேர்தல் திகதி குறித்து கவனம் செலுத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அத்துடன் ,சுகாதார பணிப்பாளர் தலைமையிலான சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை கோவையின் விடயங்களை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் தேர்தலை நடத்துவதாயின் முன்னெடுக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் என்னவென்பது குறித்து சுகாதார பணிப்பாளர் ஜனாதிபதி செயலாளரிடம் முன்வைத்த ஆலோசனை கோவையை பற்றிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் நடத்தப்பட முன்னர் பொதுமக்கள் சகலரும் பின்பற்றுக்கூடிய சுகாதார நடவடிக்கைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும், அதேபோல் தேர்தல் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற காரணிகளை ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது.

எனினும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க அனுமதி வழங்குவது, விருப்பு இலக்கம் வழங்குவது என்பது குறித்து தீர்மானம் எடுக்க முன்னர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள தேர்தல் விவகாரம் குறித்த வழக்கில் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டாக வேண்டும்,

எனவே நீதிமன்றம் திப்பு ஒன்றினை வழங்க முன்னர் தேர்தல் திகதி குறித்தோ அல்லது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தோ எந்தவித தீர்மானமும் எடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு இடையிலான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுக்கும் செயற்பாடுகளில் பல தேர்தல் குற்றங்கள் இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் ஆணைக்குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: