சிறுவர்கள் தொடர்பாக அதிகரிக்கும் முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் எச்சரிக்கை!
Thursday, October 27th, 2022
சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளன.
அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பகுதியின் காவல் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக உடல் குறைபாடுகள், மன நிலைகள் மற்றும் குழந்தைகளுக்கான நிதி நெருக்கடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெறுவதாக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
வருடத்தின் முதல் ஐந்து நாட்களில் 1500 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
சுயதொழிலை மேம்படுத்த உதவித்திட்டங்களை பெற்றுத்தாருங்கள்: நெடுந்தீவு அலைகடல் மகளிர் அமைப்பு ஈழமக்கள்...
யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத்தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி அமைச்சர்களான ஜி.எல்.பீர...
|
|
|


