இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 916 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, May 14th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 916ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நேற்றையதினம்வரை 893 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நள’;ளிஜரவுமுதல் இன்று இதுவரையான காலப்பகுதியில் மேலும் 27 பேர் குறித்த நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன் இன்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 63 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நேற்றுவரை 916 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 445 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 461 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலையில் இலங்கையில் 09 பேர் குறித்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 26 பேரும் கடற்படைச் சிப்பாய்களென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 916 பேரில் 480 பேர் கடற்படைச் சிப்பாய்களென்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இலங்கையில்கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் சமூக பரவலுக்குள்ளாகவில்லை என சுகாதார அதிகாரிகளும், கொரோனா தொற்று ஒழிப்புக்கான விசேட தொற்று நோயியல் பிரிவினரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த பிரிவினருக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வழங்கப்படும் ஆலோசணைகளுக்கமைய கொரோனாவை தடுக்கும் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு மேற்குறிப்பிடப்பட்ட விடயமே சான்று என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான சம்பள அளவுத் திட்டத்தை மாற்றவும்! வடக்கு மாகாண அரசசேவைப் பட்டதாரி உத...
மின் கட்டணச் சலுகை வர்த்தகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீ...
சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை முழுவதும் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு - சுற்றுலாத்துறை அமைச்சர...