நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் அதிரடி உத்தரவு – வவுனியாவில் வாள்வெட்டு கலாசாரத்தை இல்லாதொழிக்க பொலிஸார் விசேட நடவடிக்கை!
Thursday, April 8th, 2021
வவுனியா மாவட்டத்தில் வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்ட மாட்டாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான குலசிங்கம் திலீபன் அதன் ஒரு நடடிவடிக்கையாக நேற்றையதினம் வாள்வெட்டு குழுவுடன் தொடர்புடைய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வாள்வெட்டில் ஈடுபட்டிருந்த இருவர் வவுனியா பொலிசாரால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நான்காம் திகதி மதுபோதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக கோடரியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருந்தார்.
எனினும் குறித்த இளைஞனை வாளால் வெட்டியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்கள் அஞ்சியதால் பொலிசாரால் எவரும் கைதுசெய்யப்படாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் நேற்றயதினம் குறித்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் குறித்த காணொளி ஆதாரத்தை வைத்து விரைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியிருந்தேன்.
இதற்கிணங்க இன்றையதினம் அதிகாலை குறித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


