அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!

Tuesday, August 8th, 2017

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு யாழ். பேருந்து தரிப்பிடம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டில்ரூக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் ஆகியன ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

Related posts:


மக்களின் நலன்களை முன்னிறுத்தாது திணிக்கப்படும் பாதீட்டை எம்மால் ஏற்கமுடியாது – முன்னாள் முதல்லர் யோக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் இடையே விசேட சந்திப்ப...
வறிய நாடுகளால் 2022 ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று மீண்டும் பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!