நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே நிறைவு செய்தனர்!
Tuesday, August 29th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இது தொடர்பான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசியப்பட்டியல் எம்.பி, கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.பி., மற்றும் காலி, குருணாகல், மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆகியோர் இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஆவர்.
ஆரம்பத்தில் 15 எம்.பி.க்கள் இதில் ஈடுபட்டிருந்த போதிலும், அது படிப்படியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எம்.பி.க்களின் வசதிக்காக பாராளுமன்ற அமர்வு நாட்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
எம்.பி.க்கள் தவிர, 42 பாராளுமன்ற ஊழியர்களும் ஆங்கில மொழி பாடத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியை நியமிப்பது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று !
வடக்கில் இன்றுமுதல் கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி - பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த ...
இலங்கையில் நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவை வழங்குவதாக பெலாரஸ் கல்வியமைச்சர் உறுதியள...
|
|
|


