இலங்கையில் நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவை வழங்குவதாக பெலாரஸ் கல்வியமைச்சர் உறுதியளிப்பு!

Tuesday, October 18th, 2022

தற்போது பெலாரஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பெலாரஸ் கல்வி அமைச்சர் அன்ட்ரே இவனெட்ஸை சந்தித்துள்ளார்.

பெலாரஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் தற்போது பெருமளவிலான இலங்கை மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இலங்கை மாணவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது குறித்தும் இது போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் கல்வி அமைச்சுக்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கையின் பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பெலாரஸ் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர் பிரேமஜயந்த இலங்கையில் உள்ள பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் தற்போதைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக விளக்கமளித்தார்.

இலங்கையில் நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாக அமைச்சர் இவானெட்ஸ் உறுதியளித்துள்ளார்.

Related posts: