நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமைச்சர்கள் கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, September 20th, 2022

நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் முற்பகல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்விகள் முன்வைக்கப்படும் போது துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பதில்லை எனவும் இந்த நிலைமை காரணமாக ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும் தினத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இருப்பதை ஜனாதிபதி கட்டாயமாக்கியுள்ளார்.

மேலும் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்கள் தமக்குரிய தினங்களில் முற்பகல் 9 மணி முதல் மாலை 5.30 வரை அந்த பணிகளுக்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுவது கட்டாயம் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: