நகருக்குள் நுழைய தடை!

Wednesday, July 27th, 2016

நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் பாத யாத்திரை கண்டி நகரினுள் நுழைவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கும் போக்குவரத்திற்கும் பாதிப்ப் ஏற்படுவதை தடுக்கும் வகையில், குறித்த பாதயாத்திரையை இடைநிறுத்துமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கண்டி நீதவான் நீதிமன்றினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளடள் அதனை ஒழுங்கு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான, மஹிந்தானந்த, கெஹலிய ரம்புக்வெல்ல, திலும் அமுணுகம, லொஹான் ரத்வத்தை உள்ளிட்டோருக்கு குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை (28) காலை கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை தொடர்பான விஸ்தரிப்பு நிகழ்வினை பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பிக்குமாறு தெரிவித்து, அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, கபீர் ஹசீம் ஆகியோருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அத்துடன் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் பாத யாத்திரை மாவனல்லையின் நகரிற்குள் நுழைவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவனல்ல காவற்துறை பொறுப்பதிகாரி எம்.டீ.டீ. நிலங்க, நீதிமன்றத்தில் கோரிய வேண்டுகோளை கருத்தில் கொண்டு, இன்று (27) மாவனல்லை நீதவான் எல்.ஏ. மஹிந்த இந்த தடை உத்தரவை விதித்துள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் (28) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஐக்கிய தேசிய கட்சியின் விரிவாக்கல் செயற்திட்டம் ஒன்று மாவனல்லை நகரிலும் நாளை மறுதினம் (29) ஜனாதிபதி தலைமையில் மாவனல்லை நகரில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். எனவே, குறித்த இரு தரப்பு பிரதிநிதிகளையும் நாளைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் நகருக்குள் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு கருதி குறித்த தடை உத்தரவை பிறப்பிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts: