தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த சுற்றிலா பயணிகள் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பயணிக்க அனுமதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, September 5th, 2021

கொரோனா தொற்றிற்கான முழு தடுப்பூசிகளை பெற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்து;டன் இந்த தீர்மானம் குறித்த விபரங்கள் சகல மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய விருந்தகங்கள், உணவகங்கள் போன்றவற்றிற்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அனுமதி பத்திரத்தை கொண்ட மதுபானசாலைகள், சுற்றுலாப் பயணிகளுக்கு மதுபானத்தை விநியோகிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில்

நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 வயதுக்கு குறைவான 4 பேரும் 60 வயதுக்கு குறைவான 25 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 117 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 59 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 3 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 82 ஆயிரத்து 476 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 67 ஆயிரத்து 32 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: