தொழில் அதிகாரிகள் வேலைக்கு திரும்பும்வரை சம்பளம் கிடையாது – தொழில் ஆணையாளர் திட்டவட்டம்!

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் தொழில் அதிகாரிகள் வேலைக்குத் திரும்பும்வரை அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படமாட்டாது எனத் தொழில் ஆணையாளர் சாந்தினி அமரதுங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பள இடைநிறுத்தத்துக்கு அமைச்சரவையின் அனுமதியும் பெற்ப்பட்டிருப்பதாகவும், தொழில் அதிகாரிகள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தம் நியாயமற்றது எனவும், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைள் அசாதாரணமானவை எனவும் அவர் கூறினார். தற்போது 45 தொழில் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பிரதான கோரிக்கையான சேவைக் கொள்கைத் திட்டம் தாடர்பான சுருக்குப் பிரேரணை தயாரிக்கப்பட்டு சம்பள நிர்ணய ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் தெரிவித்தார்.
Related posts:
உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல் ஏற்படும் - கல்வியமைச்சர் !
பதவி விலகப்போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றும் அறிவிப்பு!
உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்க...
|
|