இன்று இரவு 10 மணிமுதல் 6 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நாடுமுழுவதும் நடைமுறைக்கு வருகின்றது ஊரடங்கு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Wednesday, June 3rd, 2020

இன்று இரவு 10 மணிமுதல் நடைமுறைக்குவரும் ஊரடங்கு உத்தரவு நாளை 4 ஆம் திகதி மற்றும் நாளைமறுதினம் 5 ஆம் திகதி ஆகிய இரு தினங்களும் நாடுமுழுவதும் முழுமையாக நடைமுறையில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

பொசோன் போயா தினத்தை முன்னிட்டு மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கிலேயே  எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் அன்றுமுதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை முன்னர் போன்று இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாவதனால், அன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு நேற்று மாலை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அடுத்த வாரம்முதல் வார இறுதியில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது..

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வார இறுதி நாட்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இதுவரை வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வந்தது.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவதால், வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்த அமுல்படுத்தும் தேவையில்லை என பலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையிலேயே நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் வாரம் தொடக்கம் விலக்கிக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: