தொழிற்சங்க போராட்டத்தால் நீர் விநியோகத்தடை ஏற்படலாம்!
Saturday, February 11th, 2017
நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வினை வழங்கவில்லை என்றால் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட போவதாக நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் தொழில்நுட்ப அதிகாரிகளும் இணைந்துக் கொண்டுள்ளனர்.
இதன்படி, சேவையாளர்கள் மேலதிக நேர பணியை நிராகரித்தல், இரவு பராமரிப்புக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருத்தல், வாரயிறுதி பராமரிப்பு நடவடிக்கைகளை நிறுத்தல், தமக்கு உரித்தற்ற பணிகளை மேற்கொள்ளாதிருத்தல் உள்ளிட்ட தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோக தடை உட்பட அவசர புனரமைப்பு நடவடிக்கைகளில் இருந்து தங்கள் அமைப்பு விலகியுள்ளதாக அந்த முன்னணியின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர்விநியோகத் தடை ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பொறியியல் பட்டச்சான்றாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது

Related posts:
|
|
|


