மானிப்பாய் அந்தோனியார் சொரூபம் விழுந்து உடைந்தது : தேர்ப் பவனியில் சோக சம்பவம்!

Monday, June 18th, 2018

மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது அந்தோனியார் மற்றும் குழந்தை இயேசுவின் திருச்சொரூபங்கள் விழுந்து உடைந்துள்ளன.
அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது தேரில் அந்தோனியார் மற்றும் குழந்தை இயேசுவின் திருச்சொரூபங்கள் எடுத்து வரப்பட்டன. தேர் தேவாலயத்தினை சுற்றி தேவாலய முன் பகுதிக்கு வந்த வேளை அப்பகுதியில் இருந்த பள்ளமான பகுதிக்குள் தேர் சில்லு இறங்கியமையால் தேர் சரிந்தது. அதன் போது தேரில் எடுத்து வரப்பட்ட திருச்சொரூபங்கள் கீழே விழுந்து தலைப் பகுதிகள் சேதமடைந்துள்ளன.
அந்த திருச்சொரூபங்கள் தேவாலயத்தினுள் எடுத்து செல்லப்பட்டு இன்னுமொரு திருச்சொரூபம் எடுத்து வரப்பட்டு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. தேவாலய பெருநாளின் போது திருச்சொரூபங்கள் விழுந்து சேதமடைந்தமை பக்தர்கள் மத்தியில் கடும் சோகத்தினை ஏற்படுத்தி இருந்தது.
குறித்த சம்பவத்தால் தேவாலயத்தில் கூடி இருந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் சோகமாகவும் காணப்பட்டனர்.

Related posts:

தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலைய அதிகாரிகள்- ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் ச...
கொரோனா முடக்க நிலையில் உள்ள புங்குடுதீவு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் உணவுப்பொருள் வழங்கி...
அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவை - இந்திய அரசுடன் கலந்துரையாடல் ந...