உதயன் பத்திரிகையால் சீரழிந்தது யாழ்ப்பாணத்து இளம் பெண்ணின் வாழ்க்கை – அதிர்ச்சியில் மக்கள்!

Thursday, April 4th, 2019

மணப்பெண் தேவை என்று விளம்பரப்படுத்தி அதை பார்த்து வரும் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்தார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

காங்கேசன்துறைப் பொலிஸாரால் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.

காங்கேசன் துறையைச் சேர்ந்த பெண் பொலிஸ் அலுவலகர் ஒருவர் திருமணப் பெண்ணாக பாசாங்கு செய்து குறித்த நபரை கோவிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மணப் பெண் தேவை என்று பத்திரிகையில் வந்த விளம்பரம் ஒன்றைப் பார்த்த பெண் வீட்டார் அதில் போடப்பட்ட அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கதைத்து திருமணத்துக்கான பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சீதனப் பணமான 9 இலட்சம் ரூபாவை உடன் தருமாறு மணமகன் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்தப் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர் பெண் வீட்டார். திருமணத்துக்கும் நாள் பார்க்கப்பட்டது. எனினும் மாப்பிள்ளையுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

அலைபேசி இலக்கமும் செயலிழந்திருந்தது, அவருடைய வீட்டுக்குச் சென்ற போது அங்கும் அவர் இல்லை.

சந்தேகம் கொண்ட பெண் வீட்டார் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். பொலிஸார் விசாரணைகளில் இறங்கினர். அவருடைய அலைபேசி இலக்கத்தை வைத்து விசாரணைகளை ஆரம்பித்தனர். அவர் தற்போது பயன்படுத்தும் அலைபேசி இலக்கத்தை பெற்­றுக் கொண்டனர்.

காங்கேசன்துறை குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸாரின் உதவியை நாடினர். அவர் மற்றுமொரு கல்யாணப் பெண் போன்று பாசாங்கு செய்து அவருடன் உரையாடினார்.

ஆசைவார்த்தைகளை கூறி. பெண் பார்க்க அவரை அழைத்தார். நேற்றுமுன்தினம் மருதடி பிள்ளையார் ஆலயத்தில் பெண் பார்க்கும் படலம் இடம்பெற்றது.

அங்கு வந்த சந்தேகநபரை மறைந்திருந்த காங்கேசன் துறைப் பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணைகளில் அவர் விவாகரத்துப் பெற்றவர் என்பது தெரியவந்திருக்கின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் அராலிப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்

இதனிடையே யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வைத்தியசாலைகளில் மரணிப்பவர்களது தகவல்களை திரட்டி அவர்களது வீட்டுக்குச் சென்று விளம்பரங்களை பெற்று தமது பத்திரிகையில் விளம்பரம் செய்து பிழைக்கும் தரப்பினர் மக்களது பாதுகாப்பு தொடர்பிலோ அன்றி கலாசார சீரழிவுகள் தொடர்பிலோ அக்கறைகாட்டாது தமது வருமானத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பதனால் இவ்வாறான சம்பவங்கள் பல நாள்தோறும் நடந்தேறி வருகின்றன. ஆனாலும் அவை வெளிச்சத்திற்கு வருவது குறைவாகவே இருந்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளமையால் இந்த பத்திரிகை விளம்பரத்தை நம்பி இன்னும் எத்தனை சீரழிவுகள் வெளிவரவுள்ளனவோ என்பதே மக்களிடம் உள்ள கேள்வி.

Related posts: