இலங்கையின் பொருளாதார வலுவாக்கல் முயற்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் மீண்டும் உறுதியளித்தது சீனா!

Monday, April 24th, 2023

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மேலும் பங்களிப்பு வழங்கப்படும் என சீனா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது. 

சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமத்தின் தலைவர் மியாவ் ஜியான்மின் உள்ளிட்ட குழுவினர் 22 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தனர்.

இதன் போதே ஜனாதிபதியிடம் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது பல முக்கிய முதலீட்டு முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையில் தனியொரு பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் என்ற வகையில், சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமம் ஏற்கனவே 2 பில்லியன் டொலர்களை இலங்கையில் முதலீடு செய்துள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு பொருளாதார நெருக்கடிகளிலிருந்து இலங்கை ஓரளவிற்கு மீண்டுள்ளதன் பின்னர் மேற்கொள்ளப்படும் முதலாவது நேரடி வெளிநாட்டு முதலீட்டு திட்டமாக தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாட மையத்தை கூட்டாக கட்டமைக்க சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமம், இலங்கை துறைமுக அதிகாரசபையுடன்  உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: