தொற்றும் நோய் தாக்கம் : சப்ரகமுவ பல்கலை மூடப்பட்டது!
Friday, July 8th, 2016
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு பரவிவரும் காய்ச்சல் காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. குறித்த விடயம் காரணமாக முதலாம் மற்றும் இரண்டாம் வருட விவசாய பீடங்களுக்கு அண்மையில் விடுமுறை வழங்கப்பட்டிருந்ததோடு, கடந்த புதன்கிழமை (06) அனைத்து விவசாய பீட மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விவசாய பீடத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (11) மீண்டும் திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் குறித்த காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் பல மாணவர்களிடம் காணப்படுவதனால் இன்று (08) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
Related posts:
வடக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு!
கைதிகளுக்கு கைத்தொழில் பயிற்சி வழங்க தீர்மானம்!
வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது - ஜனாதிபதியின் தேசிய பாது...
|
|
|


