தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் கல்வி அதிகரிகள் மோசடி!

Sunday, June 25th, 2017

தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பான நேர்முகத் தேர்வுக்கு ஆண்டு வரையறை செய்யப்பட்டு நேர்முகத் தெரிவுக்காக அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது வடக்கு மாகாண கல்வி அமைச்சு.

ஆனால் குறித்த கால எல்லையை எட்டாதவர்களுக்கும், தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவர்களுக்கும் வலிகாமம் வலய பாடசாலைகள் சிலவற்றின் அதிபர்களால் சிபார்சு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தற்போது நேர்முக தேர்வு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது

குறிப்பாக யா/அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் நான்கு தொண்டராசிரியர்களுக்கு சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நால்வரும் தொடர்ச்சியாக இன்றுவரை கடமையாற்றவில்லை என்பதுடன் அவர்கள் வேறு இடங்களில் வேறு தொழில்களை செய்துகொண்டிருக்கின்றனர்.

மேலும் யா/ வட்டு கார்த்திகேய வித்தியாலயத்தில்  அதன் அதிபர் தனது சிபாரிசாக கிருபாஜினி என்ற ஒருவரை தொண்டர் ஆசிரியராக சிபார்சு செய்துள்ளார். ஆனால் குறித்த கிருபாஜினி தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றிய ஒருவராவார். இதைவிட பண்டத்திரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை,  இளவாலை மாரீசன்கூடல் றோ.க.த.க பாடசாலை பண்டத்தரிப்பு ஜசிந்தா றோக.த.க பாடசாலை ஆகியவற்றிலும் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது.

வடக்கின் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தின் பிரகாரம் 01.12.2013 ஆண்டுக்கு முன்னர் குறைந்தது மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருந்ததுடன் இன்றுவரை தொடர்ச்சியாக பணியாற்றியிருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குறித்த சில பாடசாலை அதிபர்கள் மோசடியான முறையில் கல்வி அதிகாரிகளுக்கு சலுகைகளை வழங்கி இவ்வாறான அனுமதி அட்டைகளை வழங்கியுள்ளர்.

எனவே கடங்த  மூன்று நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியான முறையில் பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றிவரும் பலர் இந்த வரையறையால் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படாதுள்ளனர். ஆனால் பாடசாலைகளுக்கு கற்பித்தலுக்கே செல்லாத பலருக்கு இந்த நியமனங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளதானது வடக்கின் கல்வி அமைச்சு தொடர்ச்சியாக அதிகார துஷ்பிரயோகங்களையும் மோசடிகளையும் செய்தவரவதாகவே பார்க்கப்படுகின்றது.

எனவே தங்களுக்கு இது தொடர்பான நியாயமான தீர்வு கிடைக்கப்பெறவேண்டும் என பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே வரையறைகளின்படி  நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிரந்தால் எவ்வாறு இந்த முறைகேடுகள் நடைபெற்றது? அவ்வாறு அவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றால் குறித்த கால எல்லைத் தகைமை பெறாத தொண்டராசிரியர்களின் நிலை என்ன?  வடக்கின் கல்வி அமைச்சே!…  அதன் துறைசார் அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.

19511733_1453256014713481_1728194671_n

Related posts: