2023 பாதீடு – குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்!

Wednesday, November 23rd, 2022

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின், குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமானது.  அத்துடன் தொடர்ந்து 13 நாட்கள் குழுநிலை விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதிவரை இடம்பெற்று அன்றிரவு 7 மணியளவில், வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சரவை அலுவலகம், நாடாளுமன்றம், கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கான ஒதுக்கீடுகள் குறித்து இன்றையதினம் விவாதிக்கப்பட்டது.

முன்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் 77 வது வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக  121  வாக்குகளும், எதிராக  84  வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஒருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இதனிடையே, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நாளை ஆரம்பிக்கவுள்ளன. இந்த விவாதங்கள் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வாக்களிப்புடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: