பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாளருடன் விஷேட சந்திப்பு!
Wednesday, January 6th, 2021
இலங்கைக்கான – பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாரி இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்..
நேற்றையதினம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர் கொடுப்பனவு: கையெழுத்துப்போட மறுத்த ஜனாதிபதி!
குமுதினிக்கு சமநிலை பரிசோதனை!
ஐரோப்பியரின் தடைகளை ஏற்க முடியாது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் சீற்றம்!
|
|
|


