நாடாளுமன்ற உறுப்பினர் கொடுப்பனவு: கையெழுத்துப்போட மறுத்த ஜனாதிபதி!

Wednesday, August 7th, 2019

நான்கு இலட்சம் ரூபாவுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் பணம் கிடைக்கும் போது மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மேலதிக கொடுப்பனவாக வழங்க, அமைச்சரவையில் கொண்டு வந்த யோசனையில் தான் கையெழுத்திட மறுத்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயங்களை தான் விரும்புவதில்லை என்பதன் காரணமாகவே சில பிரச்சினை ஏற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கிடைக்கும் சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகள் அதிகம்.

அமைச்சரவையில் வாத விவாதங்கள் நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கும் யோசனை கொண்டு வரப்பட்டது. என்னால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நான் கூறினேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக இரண்டு இலட்சம் ரூபாயை வழங்கும் யோசனையே கொண்டு வரப்பட்டது. எனக்கு பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது. நான் இணங்க மறுத்து விட்டேன்.

தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2 இலட்சத்தை வழங்கும் யோசனையில் நான் கையெழுத்திட முடியாது என்று கூறினேன். இப்படியான விடயங்கள் காரணமாகவே சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன என ஜனாதிபதி கூறியுள்ளார்.

Related posts: